Categories
அரசியல்

“நோபல் பரிசை பெறுபவர்கள் புத்திசாலிகள் கிடையாது” சர்.சி.வி. ராமனின் கருத்து….. இதோ சில தகவல்கள்….!!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆவார். இவர் கடந்த 1952-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் பிறந்தார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்தார். கடந்த 1976-ம் ஆண்டு ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற வெங்கட்ராமன், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியராக பணியாற்றினார். இவர் ரைபோசோம்கள் பற்றி ஆய்வு செய்து, அதற்கான அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் ஆண்டி பயாட்டுக்களின் செயல்பாடுகள் குறித்து தெளிவு படுத்தினார். கடந்த 2009-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வெங்கட்ராமன் ராமச்சந்திரன் பெற்றார்.

இதைத்தொடர்ந்து வெங்கட்ராமனுக்கு கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட்ராமன் நோபல் பரிசு பெற்ற அனைவரும் மேதைகள் இல்லை என்று கூறியுள்ளார். இவர் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தன்னை ஒரு தோல்வி அடைந்த இயற்பியலாளர் என்றார். இவர் பொறியியல் படிப்பு படித்துவிட்டு அதன்பின் உயிரியல் படிப்புக்கு மாறியது பற்றி கூறினார்.

ஓகியாவில் 5 வருடங்கள் இயற்பியல் படித்த போது தான் செய்த உருப்படியான விஷயம் என்னுடைய மனைவியை சந்தித்து திருமணம் செய்தது தான் என்றார். இதனையடுத்து கலிபோர்னியாவில் உயிரியல் படிப்பில் சேர்ந்த புதிதில் தன்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். என்னைப் பொறுத்தவரை லாம்டா என்றால் அலை நீளம் தான். ஆனால் உயிரியலில் அதை பாக்டீரியா என்கிறார்கள் என்று கூறினார்.

சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழில் டான் ஏஞ்சல் மேன் மற்றும் பீட்டர் மூரே ஆகியோர் எழுதிய எழுதிய கட்டுரையை படித்த பிறகு தான் எனக்கு உயிரியலில் ஆர்வம் ஏற்பட்டது. மேரி கியூரி, எர்னஸ்ட் ரூதர் போர்டு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதால் தான் அதன் மீது மதிப்பு ஏற்பட்டது. நோபல் பரிசு என்பது புத்திசாலிகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனக்கு தெரிந்து நோபல் பரிசு வழங்கப்பட்ட சிலர் புத்திசாலிகள் கிடையாது என்றார். மேலும் சேக்ஸ்பியர் கூற்றுப்படி பிறக்கும்போதே சிலர் மேதைகள் என்றும், மேதமை சிலருக்கு அவர்களைத் தேடி வந்திருக்கிறது என்றும், மேதமையை சிலர் அடைந்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

Categories

Tech |