இங்கிலாந்தில் நாட்டில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஏசி வசதிகளுடன் செல்லப்பிராணிகளுக்கு விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 31 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் செல்ல பிராணிகள் அவதிப்பட்டு வருகின்றன. அதனை பராமரிக்க முடியாமல் அதன் உரிமையாளர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் லண்டனில் நாய் மற்றும் பூனைகளுக்கு ஏசி வசதியுடன் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவுகள், நடைப்பயிற்சிகள், ஈரமான துணிகள், தனி அறை என நாய்களின் உலகம் களைகட்டி வருகின்றது. சிறப்பு உணவுகள், விளையாட்டு பொருட்கள், குளுகுளு அறைகள், பராமரிப்பாளர்கள் என பூனைகள் விடுதியிலும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 200 பூனைகளும், 600 நாய்களும் இந்த விடுதியில் தங்கியிருப்பதாக அதன் காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இனி வரும் காலங்களிலும் அதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.