தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, விவசாயிக்கு நீர் இல்லாத நிலம், ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அதே போல தான் உயிராக இருப்பது விவசாயத்தில் நீர். அந்த நீரை நான் விவசாயி என்ற முறையில் அந்த அருமையை அறிந்தவன். எவ்வளவு பயன்படும், எவ்வளவு பிரச்சனையை தீர்க்கும் என்பதை உணர்ந்தவன். நீண்ட கால பிரச்சனையாக இருக்கின்ற ஒகேனக்கல் நீரேற்று பாசன திட்டத்தை மாண்புமிகு அம்மாவுடைய அரசு வருகின்றபோது நிறைவேற்றி இந்த மாவட்டம் எங்கே பார்த்தாலும் பசுமையாக செழித்து, வளமாக இருக்கின்ற மாவட்டமாக காட்சியளிக்கும்.
24 மணி நேரம் முன்முனை மின்சாரம், வீடுகளுக்கு தடை இல்லாமல் மின்சாரம் அம்மாவுடைய அரசு கொடுக்கப்படும் என்று அறிவித்து, தடையில்லா மின்சாரத்தை வழங்கிய அரசாங்கம் அம்மாவினுடைய அரசாங்கம்.ஒரு நாடு செழிக்க வேண்டும் என்றால், வளம் பெற வேண்டும் என்றால், ஒரு நாடு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்றால் தடை இல்லாமல் மின்சாரம் வேண்டும். அதை உணர்ந்து, அம்மாவினுடைய அரசு தடை இல்லா மின்சாரத்தை வழங்கியது. ஆனால் இந்த விடியா அரசு மக்களை பற்றி கவலைப்படாமல், நாட்டை பற்றி கவலைப்படாமல் இன்றைக்கு மின்கடணத்தை உயர்த்தி, மக்கள் துன்பத்தை சந்திக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல சொத்து வரி, வீட்டு வரி அதையும் உயர்த்தி விட்டார்கள். இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஏற்கனவே வீட்டு வரி 1000 ரூபாய் கட்டிருந்தால் 2000 ரூபாய் கட்ட வேண்டும். கடைக்கு நீங்கள் 1000 ரூபாய் வரி கட்டியிருந்தாள் இப்பொது கிட்டத்தட்ட 150 சதவீதம் இதுதான் நிலை. கொரோனா தொற்று இருந்த காலகட்டத்தில் இது எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், மக்கள் எப்படி போனால் என்ன ? எக்கேடு கெட்டால் என்ன ? அனைத்து வருமானங்களும் தன் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என்று, தன் குடும்பத்தில் இருப்பவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார் முதலமைச்சர் என எடப்பாடி விமர்சனம் செய்தார்.