அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து, இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற கட்சியிலே, இவ்வளவுபலம் பொருந்திய கட்சியிலே, இங்கே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருந்து வலுமிக்க கட்சியிலே…
திமுகவின் சதியால் ( அலுவலகத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்) இந்த நிலைமை என்றால் உங்களுக்கு எந்த நிலைமை என்று பாருங்கள் ? உங்கள் நிலைமை எண்ணிப் பாருங்கள். ஆகவே இந்த ஆட்சி எப்போதும் வீழும் என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது மக்கள் விரோத ஆட்சி. ஸ்டாலின் அவர்களே எங்களை எவ்வளவு பிரிக்க நினைத்தாலும், ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது…. திண்டுக்கல் மாவட்டத்தில் அத்தனை பேரும் எங்களுடன் இருக்கின்றார்கள்.
நீங்கள் எத்தனை சதித்திட்டம் போட்டாலும் மக்கள் துணை கொண்டு முறியடிப்போம். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும், மக்களுக்கு பணி செய்கின்ற கட்சி, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற கட்சி, ஏராளமான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம்.நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம்…
அம்மா கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் கிடப்பிலே போட்டுள்ளார்கள். எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே இன்றைக்கு முடக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் எவ்வளவுதான் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
எங்களுக்கு கடிதம் எழுதுகிறார், போதை பொருளை தடுப்பதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று… கேவலமாக இல்ல, கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எப்படி செய்ய வேண்டுமோ, அப்படி செய்தால்…. அதை கட்டுப்படுத்த முடியும். நான் சட்டமன்றத்தில் பேசினேன்… நாம் என்ன கஞ்சா விற்கிறோமா ? ஒத்துழைப்பு கொடுப்பதற்கு…
நீங்கள் போதை பொருளை கட்டுப்படுத்து, எங்கே போதைப்பொருள் இருக்கிறதோ அதை கண்டுபிடித்து அதன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால்…. நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாம். அப்புறம் எதற்கு காவல்துறை இருக்கிறது ? நீங்கள் எதற்கு முதலமைச்சரே தேவையில்லை. எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். செயலற்ற முதலமைச்சர் தகுதியற்ற முதலமைச்சர் என கடுமையாக விமர்சித்தார்.