Categories
அரசியல்

வீரப்பனை வீழ்த்தியது முதல் டெல்லி போலீஸ் கமிஷனர் வரை…… சஞ்சய் அரோரா கடந்து வந்த பாதை…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!!

டெல்லி கமிஷனராக கடந்த ஜூலை 31ஆம் தேதி அன்று சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவருக்கு 2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை பணிக்காலம் உள்ளது. இதனால் இவர் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ளும் போது நீண்ட காலம் டெல்லியில் போலீஸ் கமிஷனராக செயல்பட வாய்ப்புள்ளது. தற்போது நியமனத்தின் மூலம் சஞ்சய் அரோரா AGMUT கேடருக்கு வெளியே இருந்து போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள 3 வது அதிகாரி என்ற பெயரை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து சஞ்சய் ஆரோரா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள மால்வியா நேஷனல் இன்ஸ்டிட்யூடில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து ஐபிஎஸ்ஸாக தேர்ச்சி பெற்றார்.

1988 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அது மட்டுமில்லாமல் வீரப்பனை பிடிக்கும் சிறப்பு அதிரடி படையில் சூப்பிரண்டாக செயல்பட்டார். இவர் சிறப்பாக செயல்பட்டதற்காக வீர தீர செயலுக்கான முதல்வரின் விருது பெற்றார். இதனையடுத்து கோவை போலீஸ் கமிஷனராக 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். விழுப்புரம் சரக டிஐஜியாகவும் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை இயக்குனராகவும் செயல்பட்டார். மேலும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பணி செய்தும் அனுபவம் கொண்டுள்ளார். சென்னை மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் கூடுதல் கமிஷனராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளிலும் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற பிறகு 1991 ஆம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பில் முக்கிய பங்காற்றினார். மேலும் மத்திய அரசு பணிக்கு சென்ற அவர் 1997 முதல் 2002 வரை இந்தோ திபெத் எல்லை போலீஸ் பிரிவில் உத்தரகாண்ட் ஐடிபிபி பட்டாலியனில் செயல்பட்டார். அதன் பிறகு பிஎஸ்எப் பிரிவில் ஐஜியாகவும், சிஆர்பிஎப்பில் சத்தீஸ்கர் பிரிவு ஐஜியாகவும் செயல்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தோ தீபக் எல்லை காவல் படையின் டிஜிபியாக பதிவு ஏற்று செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய தலைநகர் டெல்லி மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம், 2014 சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம், ஐநா அமைதி குழு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

Categories

Tech |