சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.
அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பாலாஜி சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் மாநில கல்லூரியைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களான திருவள்ளூரைச் சேர்ந்த பூபதி, மணிகண்டன், திருவலங்காட்டைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.