செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செல்லூர் ராஜீ, என்னுடைய துறையில் தான் வந்தது கூட்டுறவு துறை. நாங்கள் தான் 10 ஆண்டுகள் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்தோம். அவர்களிடம் நாம் ஒரு ஏஜென்ட் ஆக தான் சேர வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு இணைந்து சேர்க்க வேண்டும், சேர்ந்து ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் சொல்லி, நம் தமிழகத்தில் எத்தனை மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்லி வாங்கணும், இன்னும் அவர்கள் முறையாக செய்தார்களா ? அந்த அமைச்சர் செய்தாரா இல்லை என்று தெரியவில்லை.
இலவச சைக்கிள் கொடுக்கும் திட்டம் அம்மா கொண்டு வந்தது. 2001 இல் கொண்டு வந்தது, 2006 இல் திமுக ஆட்சிக்கு வந்த போதும் கொடுத்து இருக்காங்க. இப்போது என்னவென்றால் அதை கொடுப்பதற்கு மறுக்கிறார்கள். ஒருவேளை முதலமைச்சர்., மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்தோம் என்றால்…. அதிமுக ஆட்சியில் தொடங்கினதை திமுக ஆட்சியில் தொடர்கிறது என்று மக்கள் மனதில் வந்துவிடும் என்ற எண்ணத்தினாலயா ? என்னவென்று தெரியவில்லை.
தமிழக அரசு விளம்பரத்தில் தான் செல்கிறது. பேருந்தில் முழுமையாக பெயிண்ட் அடித்தால் தான் வயசான பெண்களுக்கு தெரியும், முன்னாள் கலர் அடித்தால் பின்னால் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும் ? எல்லோரும் பேருந்து முன்னாலே பார்த்துக் கொண்டே வர முடியுமா? வயசான பெண்களுக்கு எப்படி தெரியும் ? ஆக செய்வதை திருந்த செய்ய வேண்டும் என தெரிவித்தார்.