Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அக்னிபாத் திட்டம்” ராணுவத்தில் அட்சேர்ப்பு பணிகள்…. தீவிர உடற்பயிற்சியில் இளைஞர்கள்….!!!

ராணுவத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆட்சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் நெல்லை, கன்னியாகும,ரி தென்காசி உட்பட 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த முகாம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக திருச்சி ராணுவ முகாம் கர்ணல் தீபக் குமார் அண்ணா விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தார். இதனையடுத்து விளையாட்டு அரங்கத்தில் வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டதோடு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானத்தை காண்பதற்காக பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் வருகின்றனர். மேலும் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

Categories

Tech |