Categories
மாநில செய்திகள்

பிளஸ் எது?…. மைனஸ் எது?…. “ஆராய்ந்து அரசுக்கு சொல்லனும்”….. அனைத்து மாவட்ட வளர்ச்சியே முக்கியம்…. முதல்வர் ஸ்டாலின்..!!!

அனைத்து மாவட்ட வளர்ச்சியே திராவிட மாடல் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் இன்று மாநில திட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திட்ட குழுவின் தலைவரான முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்களுடன்  ஆலோசனை மேற்கொண்டார். இதில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், “அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ் மைனஸை அலசி ஆராய்ந்து அரசுக்கு சொல்ல வேண்டும். மகளிர் திட்டத்தை இலவசம் என குறுகிய அடைப்புக்குள் அடக்காமல் பொருளாதாரப் புரட்சி என எடுக்க வேண்டும்.

இலவச பேருந்து திட்டத்தால் குடும்பங்களின் வருவாயில் 8 முதல் 12 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது என்பது புரட்சி.
இலவச பேருந்து திட்டம் குறித்த நேர்மறையான தாக்கம் பற்றி கட்டுரைகள் வெளிவர வேண்டும். வருங்காலங்களில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்து மாவட்ட வளர்ச்சியே திராவிட மாடல் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |