Categories
மாநில செய்திகள்

தீவிரவாத தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ரஜோரியில் உள்ள இந்திய ராணுவமுகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 2 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இறந்த 3 இந்தியராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அதாவது உயிரிழந்த தமிழ்நாட்டு வீரர் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது. இந்த சூழ் நிலையில் அவரின் வீரமரணத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்கள் வீர மரணம் எய்திய நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்” என டுவிட் செய்திருக்கிறார். அத்துடன் உயிரிழந்த லட்சுமணன் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்திருக்கிறார்.

இதுபற்றி வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிக்கையில், தாய்நாட்டைக் காக்கும் அரியபணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.  இதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க உத்தரவு பிறப்பித்துளேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா உள்ளதாக பாதுகாப்பு படையினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |