தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை என்பது அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி ஹட்சன் நிறுவனம் இன்று முதல் ஹட்சன் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பால் விலை உயர்வால் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் விலையை ஹட்சன் நிறுவனம் நான்கு ரூபாய், ஸ்ரீனிவாசா நிறுவனம் இரண்டு ரூபாய் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் நான்கு ரூபாய் வரை உயர்த்தி உள்ளனர் .இதனால் டீ விலை 15 ரூபாய் வரையும் காபி விலை 20 ரூபாய் வரையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கக்கூடும்.