Categories
மாநில செய்திகள்

விடைத்தாளோடு இருந்த ரூ.500….. மிரண்டு போன ஆசிரியர்….. மாணவனின் வேற லெவல் பிளான்….!!!!

குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் அறிவியல் பாடத்தேர்வில் விடைத்தாளுடன் 500 ரூபாயை இணைத்து, இப்பணத்தை எடுத்துக் கொண்டு என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிடுங்கள் என எழுதி இருந்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த மாணவன் அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை செய்யப்பட்டிருப்பதுடன், இத்தேர்வில் தோல்வி எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளில் நடைபெறுவது வழக்கம் ஆகும்.

எனினும் பள்ளித்தேர்வுகளில் இது போன்று நடந்ததில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வருடம் நடந்த பொதுத்தேர்வில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. ஒரு தேர்வில் மட்டுமல்ல, இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகள் என 2 விடைத்தாள்களிலும் அந்த மாணவர் 500 ரூபாயை இணைத்துள்ளார். இது பற்றி மாணவரிடம் விசாரித்தபோது, “தான் சரியாக படிக்கவில்லை. விடைத்தாளுடன் பணம் வைத்து அனுப்பினால் தேர்ச்சி செய்துவிடுவார்கள் என்று சிலர் பேசிக் கொண்டிருந்ததை உண்மை என்று நம்பி இவ்வாறு செய்துவிட்டேன்.

இது தேர்வாளருக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற குற்றம் என எனக்குத் தெரியாது” என்று கூறினார். இந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கூறியதாவது, 2 பாடங்களிலும் 27 மற்றும் 29 மதிப்பெண் எடுத்து இருந்தார். ஒருவேளை அவர் 500 ரூபாயை இணைக்கா விட்டால் ஆசிரியர்களே மாணவர்களின் எதிர் காலம் கருதி குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணைப் போட்டு மாணவரை தேர்ச்சிபெற வைத்திருப்பார்கள் என்று கூறினார்.

Categories

Tech |