இலங்கை கப்பற்படைகள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும், படகுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கப்பற்படையின் அட்டூழியத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு, ஒன்றிய அரசு கடிதங்கள் எழுதி வருகிறது. இருப்பினும் மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவம் குறையவே இல்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள திரிகோணமலை கப்பற் படைத்தளத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது