Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ஸ்ரீமதி புதைக்கப்பட்ட இடம்…… பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஸ்ரீமதியின் 17வது பிறந்தநாளையொட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர்  மாவட்டம், பெரியநெசலூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் 5 விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், அப்பகுதி முழுவதும், சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளனர். ஸ்ரீமதி புதைக்கப்பட்ட இடத்தில், அவரின் பெற்றோர் மரக்கன்றுகள் நட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |