Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி மோடிக்கு வாய்ப்பில்லை..! இது 2024ன் தீப்பொறி… களமிறங்கும் சிறுத்தைகள் …!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி – பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது.  அங்கு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட முரண் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கட்சியாக இருக்கும் தேஜஸ்வி யாதவ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய அரசை அமைத்துக் கொண்டார். தற்போது பாஜக கூட்டணி ஆட்சி இருந்த பீகார் மாநிலம்,  பாஜகவை புறந்தள்ளி நிதிஷ் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் பீகார் மாநில அரசியல் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்,

நிதீஷ் குமார் ரொம்ப வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். 2024-க்கு பிறகு மோடி பிரதமராக நீடிக்க வாய்ப்பில்லை என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இதுக்கு முன்னாடி அவர் பிஜேபி வலையில சிக்கிக் கொண்டாலும் கூட, பிஜேபிக்கு துணை போயிருந்தாலும் கூட, இப்போது விழித்துக் கொண்டார் நிதீஷ் குமார்.

நல்லவரோடு கைகோர்த்திருக்கிறார். இது ஒரு ஸ்பார்க். இது ஒரு நெருப்பு பொறி என்று நாங்கள் பார்க்கிறோம். இந்தியா முழுவதும் இது வேகமாக பரவ வேண்டும். பிஜேபியை தனிமைப்படுத்துவோம் அப்படிங்கற இந்த கூக்குரல். எங்களுடைய அறைகூவல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும். அதற்கு எங்களால் ஆன வேலையை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

Categories

Tech |