Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அப்படி செஞ்சா ”அடிமை ஆயிடுவேன்”…. அதான் நான் கிளர்ந்தெழுந்தேன்… ஓஹோ..! சீமான் ஆவேசத்துக்கு இதான் காரணமா ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆளுநர் மாளிகை அரசியல் பேச வேண்டிய இடமா? இல்லனா மக்களுக்கு அங்கு இருக்கக்கூடிய சட்ட திட்டங்களை கையெழுத்து போட வேண்டிய இடமா? ஆளுநர் மாளிகையா? இல்லனா அரசியல் பேசக்கூடிய இடமா? என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த அவர், அரசியல் இந்த இடத்தில் பேசக்கூடாது அப்படின்னு ஏதாவது இருக்கா. நீதிமன்றத்தில் நீதிபதிகளே இவர் ஜனநாயகத்தின் காவலர். இவர நீங்க எல்லாம் விமர்சிக்க கூடாதுனு சொல்றாங்க. அவர் ஏன் அதெல்லாம் பேசுறாரு.

அதை ஏன் பேசுறாரு. அப்ப ஆளுநர் மாளிகைக்குள்ள நீங்க ஆளுநரை நியமித்தது, அரசியல் நடத்தி அரசியல் கட்சிய அந்த கட்சியை மக்கள் தேர்வு செய்து, அதிகாரத்துக்கு வந்தவர்களால் நியமிக்கப்படுறாங்க. இவ்வளவு பயணத்தில் அரசியல் இருக்கா இல்லையா ? அப்ப ஏன் அவர் மாளிகைக்குள்ள அரசியல் பேசக்கூடாது.

ரஜினி ஒரு காலத்தில் அரசியலுக்கு வருகிறார் அப்படி சொல்லுகிற போது நீங்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தீர்கள் என்ற கேள்விக்கு, அதை பொய் என்று நீங்க சொல்ல முடியாது. இப்ப அவர் அரசியல் பேசுறாரு அப்படிங்கிறப்ப நீங்க? பேசலாம். பேசுறது வேற. இப்ப ஐயா பெரியார் அவர்கள் வந்து சமூக இயக்கமா இருந்து மக்களுக்கு சேவை செஞ்சாரு. இப்ப ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வந்து சமூக இயக்கமா இருந்து இந்த மண்ணு என்ன வாழ வச்சிருக்கு. ஒரு அமைப்பாய் இருந்து நான் சேவை செய்கிறேன் அப்படிங்கறதெல்லாம் பிரச்சனை இல்லை.

அவர் அதிகாரத்துக்கு வந்து எங்கள ஆளனும் அப்படின்னு நினைக்கிறபோது என் நிலம் சாராதவன் இனம் சாராதவன் ஆளும் போது நான் அடிமை ஆயிடுவேன். அத பல தலைமுறைகளாக நாம விட்டுக் கொடுத்துட்டதால அத கிளர்ந்தெழுந்து நாங்க வேண்டாம்னு சொல்றோம்.

நான் போய் இப்போ கேரளாவிலோ, ஆந்திராவிலோ, மகாராஷ்டிராவிலோ நான் போய் முதல்வராகணும்னு ஆசைப்படுவது எப்படிப்பட்ட தன்மைனு உங்களுக்கு தெரியும். அதனாலதான் சொல்றோம். ஆனா அவர் அரசியலே பேச கூடாதுன்னு நாங்க சொல்லல. அரசியல் ஒவ்வொரு மனிதனுடைய சுவாசம் போன்றது உயிர் மூச்சு போன்றது. அத போய் நீங்க ஏன் பேசக்கூடாதுன்னு சொல்றது.

Categories

Tech |