சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் தமிழக அரசின் சார்பில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நிறைவடைந்த கையோடு திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் இளைஞர் அணியை வலுப்படுத்தும் நோக்கிலும், திராவிட மாடல் அரசு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க கூடிய வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இளநிலை உறுப்பினர் அட்டைகளை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், இளைஞர் அணி வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பயிற்சிப் பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 100 சட்டமன்ற தொகுதியில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கூட்டத்துக்கு எவ்வளவு பேர் ஆர்வமுடன் வந்தாலும் மகிழ்ச்சிதான்.
அதே நேரத்தில் 100 பேர் கூடினாலும் நிர்வாகிகள் சோர்ந்து விடாமல் அவர்களுக்காக உற்சாகத்துடன் பாசறை கூட்டங்களை நடத்த வேண்டும். அதனை தொடர்ந்து கட்சியில் தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் பலர் ஒரு காலத்தில் இளைஞர் அணியில் இருந்தவர்கள் தான். அவ்வளவு ஏன்? நம்ம முதல்வர் கூட இளைஞர் அணியில் இருந்து வந்தவர் தான் கட்சிக்காக தீவிரமாக உழைப்பவர்களுக்கு அதற்குரிய அங்கீகார ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும் என்று அவர் கூறினார். இதனையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எம்.எல்.ஏ.வாக மட்டும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை விரைவில் அமைச்சராகி ஸ்டாலின் அழகு பார்ப்பார் என்றும், திமுக அமைத்து ஓராண்டு நிறைவிழா கொண்டாடப்படும் வேளையில் உதயநிதி அமைச்சராக முடிசூட்டப்படுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகள் ஆகியும் இன்னுமும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
இதற்கு இன்னும் அவர் சினிமாவில் நடித்து வருவது, திரைப்படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரை விரைவில் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரத்தில் ஒரு தகவல் சமீபகாலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் “நாம் முதல்வரே இளைஞர் அணியில் இருந்து வந்தவர்தான்” என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. முக்கியமாக நம்ம முதல்வரை இளைஞர் அணியில் இருந்து வந்தவர்தான் என்று அவர் கூறியுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் தான் அமைச்சர் எல்லாம் ஆக மாட்டேன், ஸ்ட்ரைட்டா சி.எம். தான் என்று மறைமுகமாக செல்ல வருகிறாரோ என்று சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இதுபோன்ற கேள்விகள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய விதத்தில் முதலில் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்றும் அமைச்சராக இல்லாமல் எம்.எல்.ஏ. என்ற நிலையிலே கட்சியில் அவருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம், தேவையற்ற விமர்சனங்களுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது என்று விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.