அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டு மக்கள் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால். மீண்டும் பழைய நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் கொரோனா 4-வது அலையின் தாக்கமானது பரவலாக காணப்படுகிறது. இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 21-ஆம் தேதி 50,000 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட இருக்கிறது.
இந்த அறிவிப்பை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள நிலையில், மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதன்படி நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதனால் தமிழகத்தின் மருத்துவ தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்பட இருப்பதால், பொதுமக்கள் யாரும் கொரோனா 4-ம் அலை குறித்து அச்சப பட வேண்டாம் என அமைச்சர் கூறியுள்ளார்.