Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!…. தோல்வியை சந்திக்கும் ரஷ்யா…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உடைய ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேலும் 1.5 பில்லியன் யூரோக்களை அளிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவானது, உக்ரைனை ஆக்கிரமிப்பதில் வெற்றி அடைவது கடினம் என பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலர் தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையில் ரஷ்ய ஊடுருவல் தள்ளாடத் தொடங்கிவிட்டது என கூறியுள்ள பாதுகாப்புச் செயலரான பென்வாலேஸ், 26 நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா போரில் தோற்கத் தொடங்கியுள்ளது என கூறியுள்ளார். சண்டையும், உயிரிழப்புக்களும் தொடர்வது உண்மை தான் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என பென்வாலேஸ் கூறியுள்ளார். எனினும் ரஷ்யா பல்வேறு பகுதிகளில் தோற்கத் துவங்கியுள்ளது என கூறியுள்ளார். சிறப்பு ஆபரேஷன் எனும் பெயரில் ரஷ்யா தொடங்கிய உக்ரைன் ஊடுருவலானது, பல்வேறு முறை மாற்றம் செய்யப்பட்டு, தற்போது வெறும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை மட்டும் குறிவைக்கும் அளவில் வந்து நிற்கிறது என பென் வாலேஸ் கூறினார்.

Categories

Tech |