சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ராமு என்பவர் ரசித்து வருகிறார். இவர் அரசு நூலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ராமு அதே பகுதியில் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் அந்த சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்நிலையில் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.