பிரிட்டன் நாட்டின் புதிய சுகாதாரச் செயலர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத் துறை ஊழியர்களை உடனே வரவழையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
பிரிட்டன் நாட்டின் சுகாதாரச் செயலராக பதவியேற்று இருக்கும் Steve Barclay, பிற நாடுகளில் இருந்து சுகாதாரத் துறைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரைவாக பணியாற்றுங்கள் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதில், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், செவிலியர் பணிக்கு வருபவர்கள் அதற்குரிய கல்வியை பயின்று இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம். அது தவிர உயர் தரத்தில் ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்பது தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். எனினும், இந்த விதிகளை தீர்மானிப்பது வேலை வழங்குபவர்கள் அல்லது அரசு மருத்துவமனை அமைப்பு கிடையாது. செவிலியர் மற்றும் தாய் சேய் நல பணியாளர்கள் கவுன்சில் தான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்றும் கூறப்பட்டிருக்கிறது.