மேஷம் ராசி அன்பர்களே…! நல்லது நடக்கும் நாளாக அமையும்.
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தடைப்பட்ட பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய திட்டம் கண்டிப்பாக நடக்கும். விலையுள்ள பொருளை பரிசாக பெறுவீர்கள். நண்பர்களுடன் மன வருத்தம் கொஞ்சம் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழிலில் சிறப்பு கிடைக்கும். குழந்தைகளுக்காக சிறிது நேரம் செலவிட வேண்டும். தீ, ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் சுறுசுறுப்புடன் பணிகளை செய்வீர்கள். காதல் விஷயங்களில் புரிதல் வேண்டும்.
மாணவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் தேடி வரக்கூடும். மகிழ்ச்சியுடன் இன்று காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் நான்கு.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.