அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்கை மழை பொழியக்கூடிய பூத் உருவாக்கப்பட்டிருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதிகமான வெப்பநிலை காணப்படும். எனவே, அங்கு வசிக்கும் மக்கள் அதனை பழக்கப்படுத்திக்கொண்டார்கள். மழை பெய்வது என்பது அங்கு அரிதாகவே இருக்கும். சில இடங்களில் கோடை காலங்களுக்கென்று செயற்கையாக நீர் விளையாட்டுகள், பனி குவியல்கள், பனி மலைகள் போன்றவற்றை உருவாக்கி அதில் மக்கள் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்கை மழை பொழியக்கூடிய விதத்தில் ஒரு பூத் உருவாக்கியுள்ளனர். அந்நகரில் வசிக்கும் மக்கள் அங்கு சென்று சிறிது நேரம் மழையில் நனைந்து விட்டு, தங்களின் உடலை குளிர்வித்து, மகிழ்ச்சியடைகிறார்கள்.