நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழு ஒரு புதிய வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
🎶அதிரடியா வரோம் ஆகஸ்ட் 19 முதல் 🎶#Tamilrockerz – #SonyLIV தமிழ் ஒரிஜினல் web series.#SitelaillaSonyLIVla @arunvijayno1 @dirarivazhagan @avmproductions @vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu pic.twitter.com/majBwzslvQ
— Sony LIV (@SonyLIV) August 11, 2022