கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கூறி கடந்த 2020 ஆம் வருடம் மே மாதத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து இறுதியாக அதன் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தின் குழந்தைகளுக்குரிய டால்கம் பவுடர் அனைத்தும் இனி சோள மாவு பவுடருக்கு மாற்றப்படுகிறது. நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானது.
எங்கள் நிறுவனத்தில் அதிக நாட்களாக மதிப்பாய்வு செய்து தான் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான தேவை, நுகர்வோரின் மனநிலை, வேறுபாடுகள் போன்றவற்றை ஆராய்ந்தோம். அதன்படி, வரும் 2023 ஆம் வருடம் முதல் நாங்கள் தயாரிக்கும் பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறது.