ஆந்திராவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையாக மின்சாரத்தை 9 மணி நேரம் இலவசமாக அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
ஆந்திராவில் மின்சார கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ள நிலையில், கூடவே சலுகையாக விவசாயிகளுக்கு 9 மணி நேரம் மின்சாரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு சுமார் 8,553 கோடி ரூபாயை மானியமாக வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக மாநில அரசுக்கு நேரடியாக தெரிவிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.