Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. தாய்க்கு காத்திருந்து பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய  மர்ம  நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 6  வயதுடைய சிறுமி ஒரு  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் காதில் தங்க கம்மல் இருந்துள்ளது. இதனை பார்த்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி அவரை திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு சாக்லேட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து சிறுமி காதில் அணிந்திருந்த 2  கிராம் கம்மலை  திருடியுள்ளார்.

இதனையடுத்து அந்த மர்ம நபர் சிறுமியை ரயில் நிலையத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார்.  இந்நிலையில் சிறுமிக்கும் மதிய உணவு கொடுப்பதற்காக அவரது தாய் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில்  ரயில் நிலையத்தில் சிறுமியை  பார்த்த ரயில்வே காவல்துறையினர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் .மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |