நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. அவர்களின் திருமணத்தில் புகைப்படம் எடுப்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சிகப்பு நிற உடையில் ஆபரணங்களை அணிந்து தேவதை போல ஜொலித்தார்.திருமணம் குறித்த ஒரு சில படங்களை மட்டுமே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா திருமண உடையை போல பலரும் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகிறார்கள். அவ்வகையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி நயன்தாராவின் திருமண உடை போன்று ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு “என்ன கொடுமை இது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.