Categories
ஆட்டோ மொபைல்

எலெக்ட்ரிக் பைக் முன்பதிவு கட்டணம் 75…. ஆகஸ்ட் 15 வரை மட்டுமே…! உடனே முந்துங்கள்….!!!

இந்தியாவில் புனே நகரை மய்யமாக கொண்டு தொடங்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட்டப் நிறுவனமான டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுக பைக்கான க்ராடோஸ் பைக்கின் உற்பத்தியை அதன் புனே தொழிற்சாலையில் தொடங்கியது.இந்த பைக்கை அந்த நிறுவனம் GUDI PADWA எனப்படும் மராட்டிய புத்தாண்டு அன்று உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்நிலையில்  டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது கிராடோஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணத்தை *75 ஆக நிர்ணயித்துள்ளது.

இந்த சலுகை ஆக., 15 வரை மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு முன்பதிவு கட்டணம் 1999 ஆக மாற்றப்படும். 2 வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கின் விலை 71,07,999 மற்றும் 31,22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் தற்போது சென்னை, மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Categories

Tech |