தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
மிளகு – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
நெய் – ஒரு மேசைக்கரண்டி
வறுத்த முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
குதிரைவாலி ,பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வழக்கமான பொங்கல் தயாரித்துக் கொள்ளுங்கள். மிளகு, கருவேப்பிலை ,தாளித்துக் கொட்டி மேலே மிதக்க விடவேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை மீண்டும் மீண்டும் தேட வைக்கும்.