Categories
தேசிய செய்திகள்

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு…. யாரெல்லாம் கட்டணும் தெரியுமா…..? தெரிஞ்சிக்கோங்க…!!!!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் வரி திருத்தம், புதிதாக சில பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்கும் விதிமுறையும் ஜூலை 18 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி யாரெல்லாம் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றால், சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தால் அவர்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. இருப்பினும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்து கொண்டவர்கள் அதாவது தொழில் செய்பவர்கள் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதற்கு முன்பாக அலுவலக இடங்கள், வர்த்தக இடங்கள் போன்றவற்றுக்கான வாடகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது. வீடு குத்தகைக்கு விடுத்திருந்தால் எந்த ஒரு வரியும் கிடையாது. ஜூன் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வீட்டு வாடகை தொகைக்கும், வீடு குத்தகை எடுத்திருந்தால் அதற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இனி வீடு வாடகைக்கு எடுக்கும் அவர்தான் வரி செலுத்த வேண்டும் உரிமையாளர் வரி செலுத்த வேண்டாம். ஜிஎஸ்டில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதாவது பொதுவாக அலுவலக இடங்கள் வர்த்தக இடங்களில் அல்லாமல் வீடுகளை வாடகைக்கு எடுத்து தொழில் செய்பவர்களுக்கு உண்டு. இதுவரை இவர்கள் ஜிஎஸ்டி செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் வீடு வாடகை எடுத்திருந்தாலும் தொழில் செய்பவர்கள் அதாவது ஜிஎஸ்டில் பதிவு செய்தவர்கள் வாடகைக்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும்.

Categories

Tech |