நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை உறுதி செய்வதற்கு அன்னிய நேரடி முதலீடு, ஜிஎஸ்டி வரி வருமானம் என 7 காரணிகள் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இல்லை என்றார்.
அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தொழில்துறையில் உற்பத்தி அதிகரிப்பு, அந்நிய செலவாணிகளின் உச்சம் என 7 காரணிகளை நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.
கடந்த கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிடுகையில் 2020 ஜனவரியில் 12 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய பங்குச் சந்தைகளும் நன்றாக வர்த்தகமாக கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிதிப்பற்றாக்குறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அதிகமாக இருந்தது என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு செய்ய மத்திய அரசிடம் பணம் இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதற்கு ,அவர் எவ்வாறு பதில் அளித்துள்ளார்.