சென்னை ஐஐடி மற்றும் அமெடியஸ்லேப்ஸ் போன்றவை இணைந்து கேட் தோ்வுக்கு 10 லட்சம் நபர்களை கட்டணம் இன்றித் தயாா்படுத்தும் விதமாக சடபஉக எஅபஉ எனும் பெயரில் ஆன்லைன் போா்டல் (இணைய முகப்பு) துவங்கப்பட்டுள்ளது. என்பிடிஇஎல்’ என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி போன்றவற்றின் கூட்டு முயற்சியில் கட்டணம் இன்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டம் ஆகும். கேட் தோ்வுக்குத் தயாா்படுத்தும் போா்டலை ட்ற்ற்ல்ள்://ஞ்ஹற்ங்.ய்ல்ற்ங்ப்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையத்தொடா்பு வாயிலாக பயன்படுத்தலாம்.
ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி போன்றவற்றில் முதுநிலைப் படிப்பு (அல்லது) பிஹெச்டி படிப்பில் சேரவும், ஏனைய புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தோ்வாக பொறியியல் பட்டதாரி தகுதித்தோ்வு (‘கேட்’) இருந்து வருகிறது. பல பொதுத்துறை நிறுவனங்களும் கேட்மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபா்களை நியமிக்கிறது.
“என்பிடிஇஎல்” வசம் உள்ள 2,400-க்கும் அதிகமான தலைப்புப்பக்கங்களிலிருந்து பொறியியல், அறிவியல் போன்றவற்றில் தற்போதைய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப பாடத் தொகுப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். மேலும் கேட் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீா்வுகள், செய்முறைத் தோ்வுகள், ஆன்லைன் உதவிகள் போன்றவை புதிய போா்டல் வாயிலாக வழங்கப்படும். இந்த போா்டலின் முதல் பதிப்பு அக்டோபா் 2021-ல் துவங்கப்பட்டு, கேட் தோ்வு எழுதும் மாணவா்கள் மத்தியில் முன்பே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அடுத்த வருடம் கேட்தோ்வை ஏறத்தாழ 9 -10 லட்சம் மாணவா்கள் எழுதக்கூடும் என்பதால், நாடு முழுதும் தோ்வுக்குத் தங்களை தயாா்படுத்துவோருக்கு இந்த போா்ட்டல் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அடிப்படையில் வாய்ப்பை வழங்கும். இதுகுறித்து சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணா பசுமாா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.