Categories
சினிமா

“எங்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு”…. நடிகர் பிரபு-ராம்குமார் மீது வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் மறைந்த சிவாஜி கணேசன். இவருக்கு பிரபு, ராம்குமார், என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும்  வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜிகணேசன் சொத்துகளில் தங்களுக்கு உரிமை உள்ளது. எனவே பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுஉள்ளனர்.

அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1000 சவரன் தங்க நகைகள் 500 கிலோ வெள்ளி பொருட்களை பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த ரூ.82 கோடி மதிப்பிலான பங்குகளை பிரபு ராம்குமார் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டு நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும். உயிர் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமார் ஏமாற்றி விட்டனர் என்று அதில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Categories

Tech |