அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட தாகிர் உசேன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கேரள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னை விரைந்த கேரள காவல்துறையினர் ரயில்வே போலீசார் உதவியுடன் தாகிர் உசேனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பணத்தை கொடுத்து ஏமாந்த நபர் மூலமாக தாகிர் உசேனுக்கு போன் செய்து லாவகமாக பேசி அவரை ரயில்வே நிலையத்திற்கு காவல்துறையினர் வர வைத்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிலையத்திற்கு வந்த அந்த நபரை ரயில்வே காவல்துறையினர் கேரள காவல்துறையின் உதவியுடன் மடக்கிப்பிடித்தனார். மேலும் தாகிர் உசேன் கேரள காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.