Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் சுதந்திர தின விழாவில்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடு இல்லாமல் தேசியக்கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளரை அன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து அலுவலகங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவது மரபு. ஆனால் ஒரு சில கிராம ஊராட்சிகளில் ஜாதி பாகுபாடுகள் காரணமாக தேசியக்கொடியை ஏற்றுவதில் பிரச்சனை மற்றும் தேசியக்கொடியையும் அவரை ஏற்றுப்பவரையும் அவமதிக்கும் செயல்கள் நடைபெறக்கூடும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் அச்சுறுத்துவது தண்டனைக்குரியது. எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின பெருவிழாவில் எவ்வித ஜாதி பாகுபாடுகளும் இல்லாமல் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |