அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் கடற்கரை இல்லத்தில் எஸ்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எஸ்பிஐ அதிகாரிகளின் சோதனைக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது டிரம்ப் ஆதர்வாளர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அவர்கள் எஸ்பிஐ அதிகாரிகளுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ அலுவலகங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவில் ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள எஸ்பிஐ அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பை மீறி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்ததால் அலுவலகத்தின் கண்ணாடி சுவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளனர். அவரை விரட்டி சென்ற போலீசார் அவர் அங்குள்ள மறைவான இடத்தில் சென்று பதுங்கி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் போலீசார் அவரை நெருங்கி சென்றபோது அவர் போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எஸ்பிஐ அலுவலகத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்து சுட்டுக் கொல்லப்பட்ட 42 வயதான ரிக்கி ஷிபர் என்னும் இவர் கடந்த வருடம் மாதம் நடந்த நாடாளுமன்ற கலவரத்தில் தொடர்புடையவர் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.