பிரதமர் வேண்டுகோளை ஏற்று தனது இல்லத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றினார்.
75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி சினிமா பரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை வைத்து வருகின்றனர்.. அதேபோல வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.. இந்நிலையில் பிரதமர் வேண்டுகோளை ஏற்று தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..
🇮🇳#HarGharTiranga pic.twitter.com/NuNWOAQrTX
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 13, 2022