Categories
அரசியல்

நோபல் பரிசுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட ஹோமி பாபா…. யார் இவர்?….. பலரும் அறியப்படாத சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!!

இந்தியா அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஹோமி ஜாஹாங்கீர் பாபா. இவர் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அன்று பிறந்தார். இவர் ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரது தந்தை பெயர் ஜஹாங்கீர் பாபா. அவர் ஒரு பிரபலமான வழக்கறிஞராக இருந்தார். இவரின் தாயார் பெயர் மெஹ்ரென். மும்பையில் பள்ளி படிப்பை முடித்த ஹாமிபாபாவிற்கு கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் அதிக ஆர்வம் இருந்தது.இருப்பினும் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு இந்திரவில் பொறியல் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1931 ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஷ் ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்த ஹோமி பாபா இயற்பியல் துறையில் காமா கதிர்களை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கான அறிக்கையை 1933 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார்.

இதனால் அணு இயற்பியல் டாக்டர் பட்டம் பெற்றார். அவரின் ஆராய்ச்சி சாதனைக்காக ஐசக் நியூட்டன் படிப்புதவி அவருக்கு கிடைத்தது. இதன்மூலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் ஜேம்ஸ் சாட்விக்கின் நியூட்ரான்கள் பற்றிய ஆராய்ச்சி ஹாமி பாபாவிற்கு அணு இயற்பியல் இன்னும் அதிகாரத்தை ஏற்படுத்தியது. 1935 ஆம் ஆண்டு எலக்ட்ரான் பாசிட்ரான் சிதறல் குறித்த தனது கணக்கீடுகளை வெளியிட்டார். அவரது ஆராய்ச்சியை பெருமைப்படுத்தும் விதமாக பிற்காலத்தில் இந்த துறை பாபா Bhabha scattering என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 1937 ஆம் ஆண்டு அவர் எழுதிய Cascade Theory of Eletron Showers என்ற ஆய்வு கட்டுரை அவருக்கு உலகப் புகழை சேர்த்தது. இவர் 1932 முதல் 1954 வரை 22 ஆண்டுகளில் 50 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார். மேலும் குவாண்டம் கோட்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 1940 ஆம் ஆண்டு பெங்களூரு சர்.சி.பி.ராமன் தலைமையில் இருந்த இந்தியாவில் ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றினார். விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் என்று நம்பி அதற்காக கடுமையாக உழைத்தார். இந்தியாவின் முதல் அணுசக்தி மையமான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன 1945 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அணு ஆற்றலில் முக்கியத்துவத்தை இந்திய அரசுக்கு விளக்கினர். அப்போதே பிரதமராக இருந்த ஜவஹர்லார் நேருவும் ஹொமி பாபா திறமை புரிந்து கொண்ட அவருக்கு ஆராய்ச்சிகள் செய்ய முழு அனுமதி அளித்தார். இதன்மூலம் பயன்படுத்திய 1948 ஆம் ஆண்டு இந்திய அணு ஆற்றல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் தலைவராக ஹோமி பாபா பொறுப்பேற்றார். அவரது தெளிவான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால் ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் உள்ள 1956 ஆம் ஆண்டு இயக்கப்பட்டது.

ஹோமிபாபா ஈடு இணையற்ற திறமையை பாராட்டி இந்திய அரசு 1954ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது அளித்து சிறப்பித்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 5 முறை பரிந்துரைக்கப்பட்டார் 1941 ஆம் ஆண்டு மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி விருதும், 1942 ஆம் ஆண்டு ஆடம்ஸ் விருதும் பெற்றார். அணு ஆயுத தயாரிப்பு குறித்து முதல்முறையாக ஆக்கப்பூர்வமாக அமைதியாகவும் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மாநாட்டில் விளக்கினார். அணு ஆயுதத்தை அமைதிப்பணிக்காகவும் பயன்படுத்தலாம் என்று எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை இந்தியாவில் பல விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார். விக்ரம் சாராபாயுடன் இணைந்து ஆராய்ச்சி கழகத்திலும் பணியாற்றினார். இதனையடுத்து 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் பயணித்த விமான சுவிட்ச்லாந்து பகுதியில் விழுந்து நொறுங்கியதில் ஹாமிபாபா அகால மரணம் அடைந்தார்.

Categories

Tech |