குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துணை சூப்ரண்டு இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பருவதன அல்லி பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்