Categories
மாநில செய்திகள்

பி டி ஆர் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்….. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசியதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

திமுக தேர்தல் சமயத்தில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தருவோம் என்ற திட்டங்களும் பி டி ஆரின் அறிவிப்பால் கேள்விக்குறியான நிலையில், நிதி அமைச்சருக்கு எதிரான அதிர்ச்சியை பலரும் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜீ கூட ஒரு பேட்டியில் பேசும்போது,  பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை தமிழக அரசாங்கம் பேசக்கூடாது என்றும்,  இவர் பேசினால் அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது என்றும்,  இவருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்த நிலையில், இந்த  துரதிர்ஷ்டவசமாக சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |