Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மின்சாரம் தாக்கி” வயர்மேன் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனான   குப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விழுப்புரம் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தில் புதிய மின் இணைப்பு தருவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென குப்பனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு குப்பனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |