Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோலாலமாக நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா…. 57 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்…..!!!!

சேலம் மாவட்ட தலைவாசல் அருகில் உள்ள செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதனையடுத்து தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் பங்களிப்புடன் புதிய தேர் தயார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 57 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் சக்தி அழைத்தல், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். மேலும் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவு மரம் ஏறும் நிகழ்ச்சி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேரோட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் அருள் பாலித்தார். அதன் பிறகு நேற்று காலை 8 மணிக்கு பக்தர்கள் பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம், அழகு குட்டி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அதன் பிறகு மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7.30 மணிக்கு நிலையமடைந்தது. தேரை சுற்றிலும் தேங்காய் மாங்காய் என விளைபொருட்கள் கட்டி தொங்கவிட்டு அழகுப்படுத்தி இருந்தனர். இந்த தேரோட்டத்தில் தலைவாசல், புத்தூர், ராயப்பனூர், கூட்ரோடு, சிறுவாச்சூர், வரகூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Categories

Tech |