கிரிவலம் செல்லும் பாதையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் ஒருவர் மது குடித்துவிட்டு நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் இதே போல் ஒருவர் மது குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டுள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த நபரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட காவல் துறையினர் கிரிவலம் செல்லும் பாதையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற சாமியார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். மேலும் அவர்கள் கஞ்சா, சாராயம் ஆகியவை வைத்துள்ளார்களா என அவர்களது உடமைகளை சோதனை செய்துள்ளனர். இதனால் கிரிவலம் செல்லும் பாதையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது