Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் முடிவு: மோடி வாழ்த்து, கெஜ்ரிவால் நன்றி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அவருக்கு நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு, தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, மத்திய அரசுடன் இணைத்து செயல்பட்டு தலைநகர் டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க செயல்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |