Categories
உலக செய்திகள்

எனக்கு கொரோனா பாதிப்பு என்று சக பயணிகளை பீதியடைய வைத்த இளைஞர் – கடைசியில என்ன ஆச்சுன்னு பாருங்க..!

ஒட்டுமொத்த சீனாவை ஆட்டிப்படைத்து வரும் “கொரோனா” வைரஸ்-ஐ கண்டு உலக மக்கள் அஞ்சி வருகிறாகள். முன்னதாக, காய்ச்சல், தொண்டை வரட்சி என அறிகுறிகள் தென்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது அந்த அறிகுறியும் கிடையாது. அந்த உடல் உபாதையையும் காட்டாமல் ஆளை கொன்று விடும் அளவுக்கு அந்த வைரஸ் வளர்ந்துள்ளது.

இதனால்,சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து விட்டார்கள் எனவும் ஆனால், சீன அரசு 200 பேர் 300 பேர் என இறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறது என்றும் ஒரு புகார் உலகம் முழுதும் சுற்றி வருகின்றது.

இதனால், சீனர்கள் எங்கள் நாட்டிற்கு வர தற்காலிக தடை என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில். நேற்று, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த சீன பயணி ஒருவர் மாஸ்க் அணிந்து கொண்டு ஹாயாக சுற்றித்திரிந்ததார்.

இவரை பிடித்துகாவல் துறை வசம் ஒப்படைத்தனர் ராமேஸ்வரம் மக்கள். இதனை தொடர்ந்து அவரை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.

நிலைமை இப்படி மோசமாக இருக்கும் நிலையில், ரஷ்யாவில் ஹராமெட் டஸ்புரோவ் என்ற வாலிபர் மாஸ்கோ சுரங்க ரயிலில் மாஸ்க் அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார்.

அப்போது,நண்பர்களுடன் விளையாட்டாக எனக்கு கொரோனா இருக்கு..எனக்கு கொரோனா இருக்கு.. என்று விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரயிலில் பயணித்த சகபயணிகளை பய முறுத்த ஆரம்பித்துள்ளார்.இதனால், பீதியில் உறைந்து போனார்கள் பயணிகள்.

இதனை தொடர்ந்து, அந்த வாலிபரைபோலீசில் பிடித்து கொடுத்துள்ளனர் பயணிகள். இதனை தொடர்ந்து, அந்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் தண்டனை கொடுத்துள்ளது ரஷ்ய நீதிமன்றம்.

Categories

Tech |