Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர விபத்து… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… தாய் மகன் பலி… பெரும் சோகம்…!!!!!!

சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பகுதியில் பெருமாள் கோவில் ரோடு முதல் குறுக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார் இவர் வீட்டில் வைத்தே ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி மீனாட்சி (48), மகன் அருண் (28), மருமகள் கிருத்திகா (20) அருளும் கிருத்திகாவும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாமி தரிசனம்  செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கிருந்து புறப்பட்டு சேலத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காரை அருண் ஓட்டியிருக்கின்றார். நேற்று காலை 6 15 மணியளவில் கார் மதுரை அடுத்து சந்தியூர் அருகே வந்துள்ளது.

அப்போது நிலை தடுமாறிய கார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடி உள்ளது. இதனால் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மரத்தில் பயங்கரமாக மோதி அங்கிருந்து பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிய அருண் மற்றும் அவருடைய தாய் மீனாட்சி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கந்தசாமி அவருடைய மருமகள் கிருத்திகா ஆகிய இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக அக்கம்பக்கத்தினர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசு தலைமையிலான போலீஸர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அருண், மீனாட்சி இருவரது உடலையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அருண் தூக்க கலக்கத்தில் இருந்திருப்பதாகவும் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |