Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நாட்டுக்காக….. ஒரு 2 அடி…. இல்ல 3 அடி…. “தேசிய கொடி ஏற்றுங்க”…. வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்  13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த வேண்டுகோளின் படி நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு தேசிய கொடி ஏற்றினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம்.. இந்த ஆண்டு நம்ம நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு. நம்ம நாட்டை வணங்கும் விதமாக, நம்ம எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம்ம இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள், பல லட்சம் பேர் எவ்வளவோ சித்திரவதைகள், கொடுமைகள் அனுபவித்து இருக்காங்க..எத்தனையோ பேர் அவங்களோட உயிரை தியாகம் பண்ணி இருக்காங்க.

அந்த சுதந்திர தியாகிகளுக்கு, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ம் தேதி ஜாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒரு 2 அடி இல்ல 3 அடி கொம்புல நம்ம தேசிய கொடியை கட்டி நம்ம வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையாள நம்ம வீட்டுக்கு முன்னால கொடிய பறக்க விட்டு நம்ம பெருமைப்படுவோம். நாடு இல்லை என்று சொன்னால் நாம இல்ல நாம எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம், ஜெய்ஹிந்த்! என்று பேசியுள்ளார்.

Categories

Tech |