Categories
தேசிய செய்திகள்

இனி கண்ட நேரத்தில்…… கடன் ஏஜென்ட்களுக்கு எச்சரிக்கை….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பது தொடர்பான புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் எந்த வகையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை பல நிறுவனங்கள் பின்பற்றாத காரணத்தினால் நேற்று கூடுதலாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவது எங்களுக்கு தெரியவந்துள்ளது.

வங்கிகள், வங்கிசாரா நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல் விடுக்கக்கூடாது, கடன் தவணையை செலுத்துமாறு இரவு 7 மணிக்கு பிறகும் காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசக்கூடாது. இந்த புதிய உத்தரவுகள் அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |