Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா ஹசாரேவை எங்கே ? எல்லாரும் வாய் மூடிக்கிட்டு இருக்கீங்க.. சிபிஐ விசாரணை கேட்டும் திருமா ..!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  5g அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதில் 2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக எதிர்கட்சிகளின் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. ‌ இப்போதைய ஊடகங்களில் இது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அண்ணா ஹசாரே போன்றவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலே ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் இப்போது வாய்மூடி மௌனித்திருப்பது ஏன் என்றும் விளங்கவில்லை ?.இப்போது அரசுக்கு ஏற்பட்டிருக்கிற நஷ்டம் 2.8 லட்சம் கோடி என்கிற நிலையில்,

இது குறித்து விசாரணை செய்வதற்கு அரசே முன்வர வேண்டும். மோடி அரசே முன் வந்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த ஊழல் முறைகேட்டுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். நீதி கோர வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்திக் கொள்கிறோம்.

Categories

Tech |